Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை வெள்ளத்தில் இருந்து தப்பித்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

First Published Jun 28, 2024, 5:31 PM IST | Last Updated Jun 28, 2024, 5:31 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆறுகளில் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகள் ஆற்றைக் கடந்து மறு பகுதிக்கு செல்கின்றன. இதனிடையே கூடலூர் அருகே உள்ள தர்மகிரி பகுதியில் ஆற்றை கடக்க மூன்று யானைகள் தண்ணீரில் நடந்து சென்றன அப்போது ஒரு யானை எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. 

மற்ற இரு யானைகளும்  செய்வதறியாது  திகைத்து நின்ற நிலையில், சிறிது தூரம் பாறைகளுக்கு மத்தியில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை நீந்தி, தத்தளித்து கரையோரம் வந்து தண்ணீரில் இருந்து வெளியேறி கரை பகுதிக்கு பாதுகாப்பாக சென்றது. சினிமா காட்சிகளை மிஞ்சும் இந்த பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில்  பரவி  வருகிறது.

Video Top Stories