நீலகிரியில் செல்ல வழியின்றி சாலையில் பதறி ஓடிய கரடி; வீடியோ வெளியாகி பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரடி ஒன்று செல்ல வழியின்றி கார் முன்பாக சாலையில் மிரண்டு ஓடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் வனத்தை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து கொணவக்கரை செல்லும் சாலையில் கரடி ஒன்று வாகனத்தை பார்த்தவுடன் காட்டுக்குள் ஒட முயன்றபோது வழி கிடைக்கதால் வாகனத்திற்கு வழிவிடாமல் வாகனத்திற்கு முன்பாக ஓடத் தொடங்கியது பின்பு வழி கிடைத்த உடன் காட்டுக்குள் சென்றது.

தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video