முதுமைலையில் சாலையோரம் ஒய்யாரமாக ஓய்வெடுத்த புலி; வியப்புடன் வேடிக்கை பார்த்த மக்கள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று சாலையோரம் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Apr 27, 2023, 2:10 PM IST | Last Updated Apr 27, 2023, 2:10 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உதகமண்டல பகுதியாகும். இப்பகுதியில் தான் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள், பறவை இனங்கள் உள்ளிட்டவை உள்ளன.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரங்களில் உணவு தேடி வரும் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இதன் ஒரு பகுதியாக முதுமலை சாராலை ஓரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் முதுமலை புலிகள் காப்பகம் மசனகுடி தெப்பக்காடு இடையிலான வனப்பகுதியில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகள் வனத்துக்குள் செல்வதால் வனவிலங்குகள் தாக்கக்கூடிய அபாயம் இங்கு ஏற்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.