உடுமலை அருகே வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் ஒற்றை காட்டு யானை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து வனப்பகுதி வழியே மூணாறு செல்லும் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக சுற்றுலாபயணிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

First Published Sep 5, 2023, 10:04 AM IST | Last Updated Sep 5, 2023, 10:04 AM IST

அமராவதி உடுமலை வனச்சரகங்களில்  யானைகள், மான்கள், காட்டெருமைகள், உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடைகாலத்தில் யானைகள் இடம் பெறுவது அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் தற்பொழுது மழை பொழிவும் குறைவாக இருப்பதால் வனப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல துவங்கி உள்ளன. மேலும் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை சாலையில் நின்று உலா வருகிறது. ஒற்றை அணை  கோபமாக இருக்கும் என்பதால் அதனை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஹாரன் அடிக்கக்கூடாது, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Read More...

Video Top Stories