வாகனம் மோதி இறந்த குட்டி மாடு.. இறந்தது தெரியாமல் குட்டியை தேடும் தாய் காட்டு மாடு - வைரல் வீடியோ

கோத்தகிரியில்  வாகனம் மோதி காட்டு மாடு குட்டி உயிரிழந்தது. குட்டி இறந்தது தெரியாமல் சாலையில் அங்கும் இங்கும் குட்டியை தேடி ஓடிய தாய் காட்டு மாட்டின் பாசம் காண்போரை கண் கலங்கச் செய்தது.

First Published Sep 3, 2023, 10:09 AM IST | Last Updated Sep 3, 2023, 10:09 AM IST

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான காட்டு மாடுகள் சுற்றித் திரிகின்றன தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு மாடுகள் குட்டிகளுடன் சாலைகளை கடந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று ஒரசோலை பகுதியில் குட்டியுடன் காட்டு மாடு ஒன்று சாலை கடந்தது அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டிக் காட்டு மாடு உயிரிழந்தது.

இந்த தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் இறந்த காட்டு மாட்டு குட்டியின் மீது இலைகளை வைத்து தாய் காட்டு மாட்டிற்கு தெரியாதவாறு மறைத்து வைத்தனர். அப்போது குட்டி காணாமல் போனதை அறிந்த காட்டு மாடு சாலையில் அங்கும் இங்கும் ஓடி குட்டியை தேடியது இந்த காட்சிகள் காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இறந்த காட்டு மாடு குட்டியை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?

Video Top Stories