Watch : குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை! உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே கோடமலை ஒசட்டி கிராமத்தில் உலா வந்த சிறுத்தை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் குன்னூர் தாலூக்காவிற்குட்ப்பட்ட கோடமலை ஒசட்டி கிராமத்தில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிலாகியுள்ளது இதன் காரணமாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.