நீலகிரியில் துரித உணவகத்தில் வாங்கப்பட்ட சமோசாவில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

குன்னூர் அருகே துரித உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட சமோசாவில் பல்லி இருந்த நிலையில், அதனை சாப்பிட்ட தந்தை, மகன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Video

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகில் உள்ள துரித உணவகம் ஒன்றில் சமோசா வாங்கி உள்ளார். இவர் வீட்டுக்குச் சென்று அந்த சமோசாவை தனது மகனுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது ஒரு சமோசாவின் உள்புறம் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டதனால் அங்கு இருந்து குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Video