நீலகிரியில் வீட்டிற்குள் புகுந்து 6 பேரை தாக்கிய சிறுத்தை; 26 மணி நேர போராட்டத்திற்கு பின் வேறியேறியது

குன்னூரில் நேற்று அதிகாலை வீட்டினுல் புகுந்து (6) பேரை தாக்கி பதுங்கி இருந்த சிறுத்தை 26 மணி நேரத்திற்கு பிறகு வெளியேறியது.

First Published Nov 13, 2023, 12:11 PM IST | Last Updated Nov 13, 2023, 12:11 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி தினமான நேற்று குன்னூர் புரூக்லேண்ட் பகுதியில் அதிகாலை 4 மணி அளவில் விமலா என்பவரது வீட்டினுள் வளர்ப்பு நாயை பிடிக்க சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது. அதனை வெளியேற்ற சென்ற தீயணைப்பு துறையினர் மூன்று பேரை முதல் கட்டமாக தாக்கியது. 

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை வெளியேற்ற முயற்சித்த போது மீண்டும் சிறுத்தை தாக்கியதில் வருவாய் துறையினர் ஒருவர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரையும் தாக்கியது. 

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நேற்று அப்பகுதியில் கேமரா பொருத்தி சிறுத்தை வெளியேறுவதை கண்காணிக்க காத்திருந்தனர். இறுதியாக 26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தை வெளியேறியது. அதன் கேமரா பதிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Video Top Stories