Asianet News TamilAsianet News Tamil

Caught on Camera | குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி! குன்னூர் அருகே பொதுமக்கள் பீதி!

குன்னூர் அருகே பகல் மற்றும் இரவு வேலைகளில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் கரடியால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிலும் காட்டு எருமைகள், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி என பல வகை வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதியாகும்,

குன்னூர் அருகே உள்ள சேலாஸ், கெந்தலா, பாரதி நகர், பில்லிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சேலாஸ் பஜார் பகுதியில் இரவு நேரத்தில் கரடி உலா வந்தது. அதனை இரவு பணியில் இருந்த காவல்துறையினர் வீடியோ பதிவு செய்தனர். அதேபோல் பாரதி நகர் பகுதியில் பகல் வேளையில் சாலையில் உலா வந்த கரடி அதனை அப்பகுதி சிறுவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



ஏற்கனவே கடந்த சில மாதங்கள் முன்பு பில்லி மலைப் பகுதியில் கரடி ஒன்றினை குன்னூர் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. எனவே கடந்த சில நாட்களாக சேலாஸ், கெந்தளா, பாரதி நகர், பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video Top Stories