வடிவேலு பட காமெடியை குறிப்பிட்டு; தமிழக காவல், போக்குவரத்து துறையை பங்கமாக கலாய்த்த பாஜக

நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்ட போது பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் சிறிது தொலைவுக்கு தள்ளிச் சென்று ஸ்டார்ட் செய்யும் நிலை ஏற்பட்டது.

First Published May 17, 2023, 3:44 PM IST | Last Updated May 17, 2023, 3:44 PM IST

நாகை மாவட்ட அரசு மருத்துவமனையை முழுமையாக இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் துறையினர் அரசுப் பேருந்தில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

ஆனால், சமயம் பார்த்து காலை வாரிய அரசுப் பேருந்தோ, போராட்டக்காரர்கள் பேருந்தில் ஏறியதும், பேருந்து ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடபட்டிருந்த காவல் துறையினர், பேருந்து ஓட்டுநர், பொதுமக்கள் பேருந்தை சிறிது தொலைவு தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை பார்த்த பாஜகவினர், பேருந்தில் இருந்தபடியே வடிவேலு பட காமெடியை குறிப்பிட்டு தமிழக காவல் துறையையும், போக்குவரத்து துறையையும் கலாய்த்தனர். வேறு வழியின்றி பேருந்தை சிறிது தொலைவு தள்ளிச் சென்று பின்னர் ஸ்டார்ட் செய்தனர்.

Video Top Stories