Asianet News TamilAsianet News Tamil

சினிமா பாணியில் நள்ளிரவில் ஆமினி பேருந்தை சேஸ் செய்த அதிகாரிகள்; நாகையில் பரபரப்பு

நாகையில் முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆமினி பேருந்தை அதிகாரிகள் 2 கி.மீ. துரத்திச் சென்று மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாகை புறவழிச்சாலை, செல்லூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகை வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த பேருந்து நிற்காமல் அதி வேகமாக சென்றது. 

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் 2 கிலோ மீட்டர் விரட்டி சென்று வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே பேருந்தை மடக்கி பிடித்தனர். பின்னர் பேருந்தின் ஆவணங்களை சோதனை செய்த போது, வரி கட்டாமல் பேருந்தை இயங்கியதும், பேருந்திற்க்கு பல்வேறு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. 

இதனால், அதிவேகமாக பேருந்தை இயக்கியது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்னி பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Video Top Stories