நாகையில் காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - பாஜகவினர் பரபரப்பு புகார்
நாகையில் குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
நாகை மாவட்டம் காடம்பாடி புதிய கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் நம்பிக்கை குழந்தைகள் காப்பகம், ஓஎன்ஜிசியில் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சூடாமணி ஆகியோரால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த காப்பகம் மீது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் சமீப காலமாக கூறப்பட்டு வருகின்றன.
கரூரில் அடுத்தடுத்து 3 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் அசத்தி வரும் அரசுப்பள்ளி மாணவர்
இந்த நிலையில் கடந்த வாரம் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையை பரமேஸ்வரன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலத் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
குடும்ப பிரச்சினையில் நபர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மிகுந்த காலதாமதத்திற்கு இடையே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வரை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பரமேஸ்வரனுடைய உறவினர்கள் காவல்துறையில் மிக உயரிய பொறுப்பில் இருப்பதாகவும், அவருக்கு வேண்டப்பட்டவர்கள் மிக முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாலும், அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
எனவே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு காவல்துறையின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டு நாகை மாவட்ட பாஜகவினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.