Asianet News TamilAsianet News Tamil

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள  உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர்  தர்காவின் 467ம் ஆண்டு கந்தூரி  விழா  இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி தர்காவின்  ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், நாகை மீரா பள்ளிவாசலுக்கு எடுத்து வரப்பட்டு, "துவா' ஓதப்பட்டது.   

அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு மற்றும்  கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட  அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொடிக்கு தூ-வா ஓதப்பட்டு வண்ணமிகு வானவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. 

கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 23ம் தேதி இரவு தாபூத்து  என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து புறப்பட்டு, 24ம் அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு தர்காவில் நடக்கிறது. விழாவை காண தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகூருக்கு வருகைதந்துள்ளனர்.

Video Top Stories