Asianet News TamilAsianet News Tamil

மரணத்திலும் பிரியாத அதே நேசம்; மயிலாடுதுறையில் கணவர் இறந்த துக்கத்தில் அதே நாளில் உயிரிழந்த மனைவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

First Published Sep 28, 2023, 5:33 PM IST | Last Updated Sep 28, 2023, 5:33 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 88). வயது மூப்பின் காரணமாக இவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று மதியம் முதல் அழுது கொண்டிருந்த இவரது மனைவி மருதாம்பாள் (83) நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி சடலத்தின் மீது மயங்கி விழுந்தவர் அங்கேயே உயிரிழந்தார். 

தம்பதியினருக்கு 50 வருட தாம்பத்திய வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வயோதிக தம்பதியினர் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories