Asianet News TamilAsianet News Tamil

ஆதீனங்களின் அழைப்பை ஏற்று மயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட துர்கா ஸ்டாலின்

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் கடந்த 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி ஆலயத்தில் கடந்த 3ம் தேதி  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். 

இரு கோவில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வதான்யேஸ்வரர் கோயில், மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று இரண்டு கோவில்களிலும் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

Video Top Stories