Watch :சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகள்! 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையா?

சீர்காழி சட்டநாதர் கோவிலில் திருப்பணிகளின் போது 22 ஐம்பொன் சிலைகளும், உலோகத்தால் ஆன செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 

First Published Apr 18, 2023, 3:00 PM IST | Last Updated Apr 18, 2023, 3:00 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பழைமை வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மே மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையல், யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த சுமார் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.


அவைகளை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரிய விசாரணைக்குப் பின்னர் அரசிடமோ அல்லது தரும்புரம் ஆதினத்திடம் ஒப்படைக்கபடும் என ஆட்சியர் தெரிவித்தார்.

 

Video Top Stories