தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது உயிரிழந்த தாயின் கல்லறை முன்பாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

மதுரையில் வசித்து வரும் முருகன் மற்றும் ஈஸ்வரி தம்பதியின் மகன் தினேஷ் குமார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் அம்மாவான ஈஸ்வரி உடல்நல குறைவால் காலமானார். உயிரிழந்த அம்மாவின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் அம்மாவின் நினைவாக மணிமண்டபம் கட்டி தெய்வமாக வழிபட்டு வந்தார். 

தனது மகனுக்கு ஊர்கூடி திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஈஸ்வரி ஆசை நிறைவேறும் முன்பாக இயற்கை எய்தினார். தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய தினேஷ் குமார் தாயின் கல்லறையிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதை நிறைவேற்றும் விதமாக தினேஷ்குமாருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தினேஷ்குமாருக்கு மதுரையைச் கண்ணன் மற்றும் விஜி தம்பதிகளின் மகளான காயத்ரி என்ற பெண்ணுடன் அம்மாவின் கல்லறை முன்பு திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Video