Watch : சட்ட நீதியும், சமூக நீதியையும் காக்க நீதித்துறை திறம்பட செயல்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
 

First Published Mar 26, 2023, 12:25 AM IST | Last Updated Mar 26, 2023, 12:25 AM IST

உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர்.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற கிளைகளை சென்னையில் அமைக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
 

Video Top Stories