ராகுல்காந்தி தண்டனைக்கும், பிரதமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! - பாஜக பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன்

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறை தண்டனை மற்றும் எம்பி பதவி பறிப்பு இதற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாஜக பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

First Published Mar 25, 2023, 7:45 PM IST | Last Updated Mar 25, 2023, 7:48 PM IST

மதுரை மேலமடை ரிங் ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஸ்ரீ ராம சீனிவாசன் மற்றும் பாஜக ஓபிசி அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ராம ஸ்ரீனிவாசன் பேசும்போது,  ராகுல் காந்தி திட்டியது பிரதமர் மோடியை மட்டுமல்ல மோடி என்ற ஒட்டுமொத்த சமுதாயத்தையும். காங்கிரஸ் கட்சி திமுகவின் கூட்டணி அதனால் கூட்டணியாக சேர்ந்து இந்த விவகாரத்தை கண்டித்து வருகின்றனர். நீதிமன்ற நடவடிக்கையை அரசியல் கட்சி மீது திணிக்கக் கூடாது.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை எம்பி பதவி பறிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவு. காங்கிரஸ் கட்சி இது குறித்து மக்கள் முன்பு நின்று பதில் கூற வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்திய மக்கள் முன்பு நின்று பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பேசினார்.

 

Video Top Stories