நடிகர் சூரியின் கிராமத்து திருவிழாவில் படையெடுத்த பிரபலங்கள்; அமைச்சர் மூர்த்தி, விஜய் சேதுபதி பங்கேற்பு

மதுரை அருகே நடிகர் சூரியின் சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் அமைச்சர் மூர்த்தி, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Share this Video

மதுரை அடுத்துள்ள இராஜாக்கூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த வருடமும் ஆடி மாதத்தில் கோவில் திருவிழா. இந்த கிராமத்தில் பிரபல நடிகர் சூரிக்கு சொந்தமான கிராமம். அதேபோல் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் இந்த ஆண்டு கலந்து கொண்டார். 

இந்த விழாவில் முன்னணி பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நடிகர் சூரி வீட்டுக்கு சென்று முன்னதாக பொதுமக்களுக்கு அவர் கைகுலுக்கி கையில் முத்தமிட்டார். இதனால் நடிகர் சூரி வீட்டிற்கு முன்பு பொதுமக்கள் ஏராளமாக திரண்டனர். அதேபோல் வணிகவரி துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நடிகர் சூரியுடன் அமர்ந்து சாப்பிட்டார். இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Video