Video : மதுரையில் பைக் ரேஸ் அடாவடி!- போலீஸ் வலைவீச்சு!

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் நள்ளிரவு பைக் ரேஸ் நடைபெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வண்டி எண் அடிப்படையில் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 

Share this Video

சென்னையைத் தொடர்ந்து மதுரை மாநகர் பாண்டி கோவில் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் சாலை மறித்து பைக் ரேஸ் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாண்டி கோவிலில் இருந்து கோமதிபுரம் செல்லக்கூடிய சாலை அதிவேகமாக சாகசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
 

Related Video