Video : மதுரை வண்டியூர் கண்மாயில் சூடு பிடிக்கத் தொடங்கிய மீன் வியாபாரம்!

பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரையில் உள்ள கண்மாய்கள் நீர் நிரம்பி மாறுகால் பாய்ந்து தண்ணீர் ஓடிக்கொண்டுவருகிறது. வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

Share this Video

பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரையில் உள்ள கண்மாய்கள் நீர் நிரம்பி மாறுகால் பாய்ந்து தண்ணீர் ஓடிக்கொண்டுவருகிறது. இந்த நிலையில் மதுரையின் நகர் பகுதியில் உள்ள வண்டியூர் கண்மாய்தொடர் மழை காரணமாகவும், வரத்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் வரக்கூடிய நிலையில் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடல் மீன்களில் ரசாயனக் கலவை தடவப்பட்டு பதப்படுத்தி விற்கப்படுவதாக குற்றசாட்டுகள் உள்ள நிலையில், உயிருடன் மீன்கள் கிடைப்பதால் அந்த வழியாக செல்வோர் உற்சாகமாக வாங்கி செல்கின்றனர்.

Related Video