மதுரையில் ஆபத்தை உணராமல் வெள்ளத்தில் மீன் பிடித்த பொதுமக்கள்

மதுரை மாவட்டம் சாத்தையாறு அணைப்பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக சாத்தையாறு வரத்து கால்வாயில் இருந்து வந்தீர் கண்மலை செல்லும் பகுதி முழுவதுமாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. 
 
Share this Video

மதுரை மாவட்டம் சாத்தையாறு அணைப்பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக சாத்தையாறு வரத்து கால்வாயில் இருந்து வந்தீர் கண்மலை செல்லும் பகுதி முழுவதுமாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. 

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் மருதங்குளம் பகுதியில் வெள்ள நீரில் ஏராளமான பொதுமக்கள் வீச்சு வலையை பயன்படுத்தி மீன்களைப் பிடித்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வலையில் ஏராளமான கெண்டை மீன்கள் கிடைப்பதால் பொதுமக்கள் அடுத்தடுத்து வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் வெள்ள நீரை பொருட்படுத்தாமல், மீன்பிடிப்பதையும் வேடிக்கை பார்ப்பதாலும் ஆபத்தான நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்கள் பார்வையிடுவதன் காரணமாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Related Video