Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!

மதுரையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த போதை கும்பல் அங்கிருந்த பொதுமக்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Video

மதுரை நேதாஜி சாலை பகுதியில் இருக்கக்கூடிய பிரபல பிஸ்கட் கடைக்கு எதிர்ப்புறம் உள்ள சாலையில் மார்வாடிகள் வணங்கக்கூடிய காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவில் அருகே இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு இருந்துள்ளார். அப்போது 4 பேர் போதையில் வருவதை கண்டு வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அந்த நபரை அரிவாளால் வெட்டினர்.

அவருடன் வந்த மற்ற மூன்று இளைஞர்களின் மற்றொருவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுக்கும் காட்சி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதேபோன்று மூன்று இடங்களிலும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Video