Video : திமுக பிரியாணி விருந்து; முந்தியடித்துச் சென்றதில் பெண் ஒருவருக்கு காயம்!!

மதுரையில் திமுகவின் பிரியாணி விருந்தில் பிரியாணிக்காக திமுகவினர் முந்தியடுத்து சென்ற போது, கதவு கண்ணாடி உடைந்ததில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
 

Share this Video

திமுகவின் தலைவராக மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதை கொண்டாடும் விதமாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்று பிரியாணியை சாப்பிடுவதற்காக முந்தியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது, கதவின் கண்ணாடி உடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார். உடனே அவரை மீட்ட திமுகவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Video