Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்

மதுரை மாவட்டத்தில் கறிக்கடையில் வைக்கப்பட்டிருந்த கறியை தெரு நாய் ஒன்று தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த நிலையில், கடை ஊழியர் மீண்டும் அதே கறியை எடுத்து வந்து விற்பனைக்காக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jun 17, 2024, 12:40 PM IST | Last Updated Jun 17, 2024, 12:40 PM IST

மதுரை மாநகர், பழங்காநத்தம் பகுதியில் பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் வாசலில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையில் கறியை கழுவி அருகே இருந்த வாலியில் வைத்த நிலையில் அங்கு வந்த இரண்டு நாய்களில் ஒரு நாய் வாலியில் இருந்து கறியை தூக்கிக் கொண்டு சாரையில் ஓடியது,

இதனை கண்ட கடையில் பணியாற்றிய வாலிபர் ஒருவர் நாயை விரட்டி சென்று பிடித்து மீண்டும் கறியை கழுவி விற்பனைக்கு வைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அசைவ பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.