சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி

மதுரை அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி - முதல் முறை விமானத்தில் செல்வதாக மாணவர்கள் நெகிழ்ச்சி.

Share this Video

வானில் சிறகடிப்போம் என்ற தலைப்பில் ரோட்டரி கிளப் சார்பாக மதுரை அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மதுரை விமான நிலையம் வந்த மாணவர்களை மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் விமானத்தில் செல்லும் மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து 10 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியர் என 11 பேர் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சொல்கிறார்கள். மேலும் சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தை ஒரு நாள் மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் பேருந்து மூலமாக மதுரை புறப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், முதல்முறை விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக நெகழ்ச்சியுடன் கூறினார்கள்.

Related Video