Watch : மதுரையில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து! போலீசாருக்கு போக்கு காட்டிய போதை ஆசாமி!

மதுரையில் மது போதையில் காரை ஓட்டி வந்த நபர், இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி, சுமார் இரண்டு மணி நேரம் போலீசாருக்கு போக்குக்காட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
 

Share this Video

மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில், மேல மாசி வீதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்றிரவு அளவுகதிகமான மது போதையில் தனது காரில் அதிவேகமாக ஓட்டிச் சென்று முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அதிவேகமாக காரை ஓட்டி சென்ற பிரித்விராஜ் என்பவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் போதை அளவிடும் கருவிகொண்டு சோதனை செய்ய முற்பட்டபோது சுமார் 2 மணி நேரம் போலீசாரை போக்குக்காட்டி வந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Related Video