Asianet News TamilAsianet News Tamil

ரஜினியின் சிலைக்கு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கிய மதுரை ரசிகர்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் ரசிகர் ஒருவர் ரஜினியின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ரஜினிகாந்த் ரசிகரான திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் 50 வயது கொண்ட கார்த்திக் என்பவர், கடந்த மூன்று ஆண்டு காலமாகவே, வாடகைக் கட்டிடமான தொழில் நிறுவனத்தில் தனியாக ஒரு அறை எடுத்து,  அதில் ரஜினியின் பல்வேறு படங்களில் உள்ள உருவங்களை போஸ்டராக ஒட்டப்பட்டு, ரஜினி கோவில் என பெயரிட்டு ரஜினியின் படத்திற்கு நாள்தோறும் ஆறு வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் செய்து வழிபட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லாலான மூன்றடி உயர ரஜினியின் சிலைக்கு.  கடவுள் போன்ற திருவாச்சி அமைத்து மின்விளக்குகளால் அலங்கரித்தும், ரஜினியுடைய சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டார்.

மேலும் ரஜினி பல்லாண்டு நீடூடி வாழவும் தனது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்து கொண்டனர். விரைவில் ரஜினிக்காக சொந்த இடம் வாங்கி அதில் கட்டிடம் கட்டி ரஜினி கோவில் என பெயரிட்டு வழிபட உள்ளதாகவும், திட்டம் திட்டி உள்ளதாக கார்த்திக் தெரிவித்தார். மேலும் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு அன்னதானமும் வழங்கி மகிழ்ந்தார்.

Video Top Stories