ஆத்தி என்ன பொசுக்குனு நம்ப பக்கம் திரும்பிடுச்சி; ஜல்லிக்கட்டு விழாவில் காவலர்களை தெறிக்கவிட்ட காளை

பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவிய காளை ஒன்று திமிறிய நிலையில் அதனை கண்டு பதறும் காவலர்களின் வீடியோ இணையத்தில் வரலாகி வருகிறது.

Share this Video

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 10 சுற்றுகளாக காளைகள் அவிழ்க்கப்படும் நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில் வாடி வாசலுக்கு அழைத்து வரப்பட்ட காளை ஒன்று திடீரென அதன் உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன் பின்னர் காளை யாருக்கும் கட்டுப்படாத நிலையில் வாடிவாசலுக்கு வரும் முன்பாகவே காளை திமிரியது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் காளையை பார்த்ததும் பதற்றத்தில் கட்டைகளின் மேல் ஏறும் வீடியோ வைராகி வருகிறது.

Related Video