100க்கும் அதிகமான பராம்பரிய நெல் ரகங்களை மழலை மொழியில் ஒப்புவிக்கும் 4 வயது குழந்தை
மதுரையைச் சேர்ந்த 4 வயது சிறுமி தனது மழலை மொழியில் 100க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களின் பெயர்களை குறிப்பிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் அவர்களால் துவக்கப்பட்ட தேசிய பாரம்பரிய நெல் திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெறுகின்றது. இதில் பாரம்பரிய நெல் வகைகளை ஒப்புவிக்கும் போட்டி மாணவர்களிடையே நடைபெறுகின்றது. இதில் மதுரை சக்கிய மங்கலத்தைச் சேர்ந்த மாரிமுத்து சுவாதி தம்பதியினரின் மூத்த மகள் ஜாக்கிசா கலந்து கொள்வதற்காக அவரது தாயார் சுவாதி தனது மகளுக்கு 180க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பற்றி சொல்லிக் கொடுத்துள்ளார்.
இதனை அருகில் இருந்து கேட்ட நான்கு வயது இரண்டாவது மகள் போஷிக்கா தனது தாயாரிடம் மழலை மொழியில் 100க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை மழலை மொழியில் ஒப்புவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.