Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்

மதுரை சோழவந்தான் அருகே அரசு அலுவலகத்தில் மின்வாரிய பொறியாளர்கள் மது அருந்தும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ஆறுமுகம் மற்றும் இளநிலை பொறியாளர் ரமேஷ் ஆகிய இருவரும் திருவேடகம் பகுதியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தினுள் அமர்ந்து பணி நேரத்தில் ஒய்யாரமா மது அருந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மதுரை மின்வாரிய முதன்மை பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது, மின்வாரிய அலுவலர்கள் எப்படி குடிநீர் வாரிய அலுவலகத்தில் சென்று மது அருந்தினார்கள் என தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்கு பின்னர் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Video