செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி மொட்டை அடித்து திமுகவினர் சிறப்பு பிரார்த்தனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவர், கவுன்சிலர் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Share this Video

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் பூரண குணமடைய வேண்டி, கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர்.

மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்க பிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Related Video