Watch : மின்சாரம் தாக்கி பலியான தாய்! காரியம் முடிந்த கையோடு மகளின் கழுத்தில் தாலிகட்டிய மணமகன்!

நாகர்கோவில் அருகே தாய் இறந்து காரியம் முடிந்த கையோடு மகளுக்கு திருமணம் நடைபெற்றது. கண்ணீர் மல்க உறவினர்கள் ஆசீர்வதித்தனர்.
 

First Published Mar 27, 2023, 2:14 PM IST | Last Updated Mar 27, 2023, 2:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் சண்முகவேல்-சாந்தி தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு எள்ளுவிளை பகுதி இளைஞருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் மணப்பெண்ணின் தாயார் சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சாந்தி உயிரிழந்தார்.

இதனால் மொத்த திருமண நிகழ்வும் சோகத்தில் மூழ்கியது. மேயர் மகேஷின் பரிந்துரையால், உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உடற்கூறு முடிந்து இறுதி காரியம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்யாணம் எந்த தடங்கல் இல்லாமல் உறவினர்களின் முன்னிலையில் நடைபெற்றது. தாய் இறந்த துக்கம் தாங்காமல் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் கண்ணீர் மல்க மணமக்களுக்கு ஆசீர்வாதம் செயதனர்.

மகளின் திருமணத்திற்கு மாவு அரைத்த போது நேர்ந்த சோகம்; திருமண வீட்டில் ஒப்பாரி வைத்த உறவினர்கள்
 

Video Top Stories