Asianet News TamilAsianet News Tamil

இந்தியா என்ற பேரை கேட்டாலே அதிருதா.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்

அண்ணாமலை தான் செய்யும் விவசாயத்தை மற்றவர் செய்ய முடியாது என்கிறார். இதன் மூலம் தனது உள்ள கிடப்பை வெளி கொண்டு வந்திருக்கிறார். ஜாதிய கோட்பாட்டை அண்ணாமலை  வழி மொழிந்திருக்கிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

First Published Sep 10, 2023, 2:33 PM IST | Last Updated Sep 10, 2023, 2:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில், முதல்வரின் சாலை  மேம்பாடு திட்டத்தின் கீழ்    8.56 கோடி ருபாய் செலவிலான சாலை கட்டமைப்பு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். தேங்காய் பட்டணம் பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி 20 மாநாட்டை பாஜக அரசு நாட்டின்  நலனுக்காக ஒரு மாநாடாக பிரபலப்படுத்த வில்லை. 

விளம்பரம் அனைத்தும் பாஜகவை முன்னிலைப்படுத்தும் விதமாகவே உள்ளது. ஜனநாயக நாட்டை மன்னராட்சியை போன்று  கொண்டு செல்கின்றனர். பாஜக இன்று இந்தியா கூட்டணியை பார்த்து அச்சத்தில் உள்ளது. அவர்களால் இந்த கூட்டணியை எதிர்த்து நிற்க முடியாது என்பது தெளிவாக தெரிந்துள்ளது. இந்தியா  என்ற பெயரை கேட்டாலே அலறல் வருகிறது. இந்தியா என்றும் வெல்லும். திமுக துணைப்பொது செயலாளர் சொல்வது போன்று சனாதனம் இரண்டு. 

ஒரு சனாதனம் தென் இந்தியாவில் கடைபிடிப்பது போன்று இந்து தர்மம் என சொல்லும் நியாயமான ஆன்மீகத்தை போதிக்க கூடியது. மற்றொன்று கடுமையாக சமூக நீதி கோட்பாட்டிற்கு, சமத்துவத்திற்கு எதிரான, சாதிய கட்டமைப்பை உருவாக்கும், மனு தர்மத்தை அடிப்படையாக கொண்ட, வர்ணாசரத்தை அடிப்படையாக கொண்ட சனாதனம். இது குலகல்வி திட்டத்தை  போன்றது. அதனை மக்கள் எதிர்த்தார்கள். தூக்கி எறிந்தார்கள்.  

இன்றைக்கு அண்ணாமலை தனது உள்ள கிடப்பை வெளி கொண்டு வந்திருக்கிறார். ஜாதிய கோட்பாட்டை அண்ணாமலை  வழி மொழிந்திருக்கிறார். அதனைதான் திமுக எதிர்க்கிறது. அவர் செய்யும் விவசாயத்தை மற்றவர் செய்ய முடியாது என்கிறார். செருப்பை தைப்பதை மற்றவர் செய்ய முடியாது. முடி வெட்டுபதை மற்றவர்கள் செய்ய முடியாது. மரம் ஏறுவதை மற்றவர்கள் இதில் என்ன ஏற்ற தாழ்வு இல்லை?. பொது அறிவு உள்ள அனைவருக்கும் இது தெரியும்” என்று கூறினார்.

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

Video Top Stories