குமரியில் நகராட்சி ஆணையரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்களிடையே மோதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகராட்சி ஆணையரை மாற்றக்கோரியும், மாற்றக் கூடாது என கோரியும் திமுக கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தண்ணீர் பாட்டிலால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24-வார்டுகள் கொண்ட குளச்சல் நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடன் திமுக கவுண்சிலர்கள் சிலர் தங்கள் வார்டுகளில் முறையாக வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும் நகராட்சி ஆணையர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டிய சில திமுக கவுண்சிலர்கள் அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணையருக்கு ஆதரவாக திமுக கவுண்சிலர் ஒருவர் கூட்டத்தில் பேசிய நிலையில் மாறி மாறி தண்ணீர் பாட்டில்களை திமுக கவுண்சிலர்களே இரு தரப்பாக பிரிந்து வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

திமுக கவுன்சிலர்கள் கைகலப்பில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video