Watch : சினிமா பாணியில் பாம்பை தோளி்ல் போட்டுக்கொண்டு சரக்கடிக்க வந்த முதியவர்!

மதுர விஜய் பட பாணியில் பாம்பை தோளில் போட்டுக்கொண்டு டாஸ்மார்க் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Video

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு ஏழு அடி நீளம் கொண்ட பாம்பை தோளில் போட்டுக்கொண்டு முதியவர் ஒருவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கியுள்ளார் அவரைக் கண்டதும் அங்கு உள்ள பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனைத்தொடர்ந்து, பாம்பை லாபகரமாக பிடித்து சிறிது நேரம் வேடிக்கை காட்டியவர் அந்த நபர், பின்னர் பாம்பை தன் லுங்கியில் போட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது.

Related Video