Video : வாலாஜாபாதில் உள்ள பள்ளியில் அறிவியல் கண்காட்சி!- 1000க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள்

வாலாஜாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கணித கண்காட்சியை, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
 

First Published Oct 12, 2022, 12:27 PM IST | Last Updated Oct 12, 2022, 12:27 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில், 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் சம்பந்தமான படைப்புகளை படைத்திருந்தனர். அதில், சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களை சுந்தர் வெகுவாக பாராட்டினார்.

Video Top Stories