படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பலி

படப்பை அருகே நாட்டரசன் பட்டு பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Share this Video

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வடமேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (65). இவர் படப்பை நோக்கி சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்டரசன் பட்டு ஏரிக்கரை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானது.

இதில் மாயன் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல் துறையினர் மாயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து குரோம் பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video