காஞ்சிபுரத்தில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்த்து மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தபடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அயோத்தியில் ராமர் கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை நேரலையாக பார்த்து மகிழ்ந்தார்.

First Published Jan 22, 2024, 2:00 PM IST | Last Updated Jan 22, 2024, 2:00 PM IST

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக தமிழகம் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், எல்.இ.டி திரை மூலம் அயோத்தியில் நடைபெறும் விழாவை நேரலை செய்ய முன்னரே அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அந்த எல்.இ.டி திரையை அகற்றினர். இதனைத் தொடர்ந்து கோவில்களில் அயோத்தி விழாவை நேரலை செய்ய எந்த அனுமதியும் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீண்டும் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு ராமர் பிரதஷ்டை செய்யும் நிகழ்வானது நேரலை செய்யப்பட்டது.

இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.