"புதிய விமான நிலையம்" மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாத அரசு; வயலில் இறங்கிய கிராம மக்கள்
புதிய விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் 600வது நாளை எட்டி உள்ள நிலையில், தற்போது வரை போராட்டத்தை கண்டு கொள்ளாமல் புதிய அறிவிப்புகளை வெளியிடும் அரசை கண்டித்து ஏக்னாபுரம் மக்கள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக ஏக்னாபுரம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் நிலம் கையப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் 600வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது வரை போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசை கண்டித்து போராட்டத்தின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஏக்னாபுரம் கிராமத்தில் இருந்து பேரணியாக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக சென்று வயல்வெளியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.