நாட்டிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே நபர் எங்கள் முதல்வர் - காஞ்சியில் ரோஜா பெருமிதம்
ஆந்திரா மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார்.
தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா, தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற தேவையான உடல் பலனையும், சக்தியையும் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய முதல் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
மாநிலங்களில் எந்த பேரிடர் இழப்புகள் நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு மாநில அரசே பொறுப்பேற்க ஏற்க வேண்டுமே தவிர மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது என்றார்.