Asianet News TamilAsianet News Tamil

Viral Video : கடையில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு! - 4 பெண் போலீஸ் பணியிடை நீக்கம்!

படப்பை அருகே கடையில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர், டிரைவர் உள்பட நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

First Published Jun 7, 2023, 3:37 PM IST | Last Updated Jun 7, 2023, 3:37 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடையில் சாக்லேட், பிரட் ஆம்லெட் , ஜூஸ் போன்றவற்றை மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு காசுகொடுக்க மறுத்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவல்நிலைய ஜீப் ஓட்டுநர் பெண் காவலர் ஜெயமாலா, மற்றும் இரண்டு ஏஆர் பெண் காவலர்கள் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தாம்பரம் அடுத்த படப்பை ஜூஸ் கடையில் பணியில் இருந்த ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவதும், கடையின் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஓசியில் ஜூஸ் கேட்டு மிரட்டுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தாம்பரம் காவல்துறை ஆணையாளர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Video Top Stories