சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி! மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை புலி, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவுக்காகவும் தண்ணீர் காகவும் வரச் சாலையை கடந்து செல்வது வழக்கம். 

First Published Mar 24, 2024, 12:23 PM IST | Last Updated Mar 24, 2024, 12:37 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை புலி, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவுக்காகவும் தண்ணீர் காகவும் வரச் சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதி காய்ந்து வன குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைகின்றனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல் மக்களவை தொகுதியை கேட்டு வாங்கிய பாமக.. யார் இந்த திலகபாமா? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி சோதனை சாவடி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில்  குட்டிகளுடன் வந்த ஐந்துக்கும்  மேற்பட்ட  யானைக்கூட்டம் ஒன்று நெடுஞ்சாலையிலேயே வெகு நேரம் உலாவிக்கொண்டு  இருந்தது. இரவு நேரம் என்பதால் போக்குவரத்து இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. அந்த யானை கூட்டம் காலை நேரத்தில் பண்ணாரி வன சோதனை சாவடி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் முகாமிட்டிருந்தது. இதனால் அவ்வழியாக  சென்ற வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதையும் படிங்க:  யானைக்கும் யானைக்கும் சண்டை.. கோயில் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ..

வெகு நேரம் காத்திருந்த வாகன ஒட்டிகள் ஒருவழிபுரமாக சாலையை கடந்து சென்றனர். தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் பண்ணாரியிலிருந்து காரப்பள்ளம் சோதனை சாவடி வரை செல்லும் வனச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Video Top Stories