திண்டுக்கல்: ஜெட் வேகத்தில் அதிகரித்த தக்காளி விலை மீண்டும் குறைந்தது - பொதுமக்கள் மகிழ்ச்சி
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்த நிலையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூபாய் 60க்கு விற்பனை ஆகிறது.
தமிழகம் முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானியர்கள் ஒரு கிலோ வாங்கும் இடத்தில் 100 கிராம் கால் கிலோ என வாங்கி வந்தனர். திண்டுக்கல் மாநகராட்சி காந்தி காய்கறி மார்க்கெட்டில் சந்தோஷ் முத்து கடையில் இன்று காலை 6 மணியிலிருந்து தக்காளி ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்பட்டது.
அறிந்த பொதுமக்கள் கடையில் வந்து இரண்டு கிலோ தக்காளி வாங்கி சென்றனர். தக்காளி கிலோக்கு ரூபாய் 120 க்கு விற்பனை செய்யும் பொழுது, பாதி விலையான 60 ரூபாய்க்கு விற்பனை செய்வததால் பொதுமக்கள் ஆர்வத்தோடு சந்தோஷத்துடனும் தக்காளிகளை வாங்கிச் சென்றனர். தக்காளி தரமானதாகவும், ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்து மக்களின் நலனுக்காக விலை குறைக்கப்பட்டு மூன்றரை டன் வரை வியாபாரம் செய்ய இருப்பதாக வியாபாரி தெரிவித்தார்.
மேலும் தக்காளி அனைவருக்கும் சென்றடையும் வகையில் விற்பனை செய்வதாகவும், இதில் ஒரு நபருக்கு இரண்டு கிலோவுக்கு மேல் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். தக்காளி கிலோ 120 விற்கும் பொழுது அதே தரமான தக்காளியை 60 ரூபாய்க்கு கொடுப்பதால் கால் கிலோ ,அரை கிலோ என வாங்க வந்த நாங்கள் மகிழ்ச்சியுடன் இரண்டு கிலோ வாங்கி செல்கின்றோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!