Watch Video: விபத்தில் மரணம்: கல்லூரி மாணவனின் கண்களை தானம் செய்த உறவினர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்
திண்டுக்கல் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவனின் கண்களை உறவினர்கள் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள பில்லம நாயக்கன்பட்டியில் வசித்து வரும் சின்னத்துரை பாப்பாத்தி தம்பதியினரின் மகன் அமரேஷ் ( வயது 19 ) இவர் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை ஆங்கிலம் பயின்று வருகிறார்.
இதற்கிடையே இன்று தனியார் பேருந்தில் திண்டுக்கல்லில் இருந்து தனது சொந்த ஊரான பில்லமநாயக்கன்பட்டிக்கு பயணம் செய்துள்ளார். பில்லமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போது படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இறந்த கல்லூரி இளைஞர் அமரேசின் கண்களை தானம் செய்ய அவர்களது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் இறந்தும் வாழும் மனிதர்களின் பட்டியலில் கல்லூரி மாணவர் அமரேஷ் இடம் பிடித்துள்ளார் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.? முழு விபரம்
இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்