Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்

ஆளும் கட்சியான திமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

Dmk vs tamilnadu bjp clash increased
Author
First Published Mar 12, 2023, 12:38 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், " நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் இப்போது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது .  திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார்.அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. 

Dmk vs tamilnadu bjp clash increased

இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை. ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Dmk vs tamilnadu bjp clash increased

இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பா ஜ கவினர் உயிருடன் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் தி மு கவின் அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி தூத்துக்குடியில் பேசியிருக்கிறார். சட்ட மன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியதற்கு குறித்து மௌனம் காத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,தற்போது பாஜகவினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ் பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்

Dmk vs tamilnadu bjp clash increased

ஆளும் கட்சி என்ற ஆணவத்தில், திமிரில் இது போன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர் எஸ் பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு, இதே போன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது, அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க ஆளும் தி மு கவே முயற்சி செய்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.? முழு விபரம்

Follow Us:
Download App:
  • android
  • ios