ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பிரபாஸை முந்திக்கொண்டு அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நட்சத்திரம் ஆகியுள்ளார். இது தெலுங்கு திரையுலகத்தில் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் இந்தி சினிமாவில் அறிமுகத்திற்காக அல்லு அர்ஜுன் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பான் - இந்தியா ட்ரெண்டாக இருக்கும் இந்த நிலையில் நேரடி இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைகிறார் அல்லு அர்ஜுன்.
டி-சீரிஸ் தயாரிப்பிற்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ.125 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பளத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் டோலிவுட் நடிகராக இருந்த பாகுபலி பிரபாஸை வீழ்த்தியுள்ளார் அல்லு அர்ஜுன். பிரபாஸ் தற்போது 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவகிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது அவரை அல்லு அர்ஜுன் அவரை முந்தி பெரும் சாதனை படைத்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஆர்ஆர்ஆர் வெற்றிக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை.
தற்போது அவர்களது பழைய கமிட்மென்ட் படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்போது ஆஸ்கார் விருது ரேஸில் உள்ள எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்திற்காக தலா ரூ.75 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் எவ்வளவு சம்பளத்தை உயர்த்துவார்கள் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஆஸ்கார் விருதுகளில் இருந்து திரும்பி வந்து ஏதேனும் புதிய திட்டங்களில் கையெழுத்திட்டால், அவர்கள் அல்லூர் அர்ஜுனை விட அதிக சம்பளம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் அதிகமான சம்பளம் வாங்கும் நிலையில் அவரது சாதனையையும் முறியடித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
புஷ்பா - தி ரூல் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். சுகுமார் எழுதி இயக்கி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.