அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்

அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று பேசியுள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

Dmk rs bharathi challenge to bjp annamalai

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், " நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் இப்போது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது .  திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார்.

Dmk rs bharathi challenge to bjp annamalai

திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆரியர்களுக்கு எதிரான ஆட்சி. ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இதயம் அனுமதிக்கிறதா? ஆளுநருக்கு இதயத்திற்கு பதில் களிமண் இருக்கிறதா? பலர் ஆன்லைன் ரம்மியால் பணத்தினை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்னர். அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Dmk rs bharathi challenge to bjp annamalai

அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை. ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Dmk rs bharathi challenge to bjp annamalai

ஏப்ரல் 14ம் தேதி தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணமாலை கூறுகிறார். மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன், அவர் காவல்துறை பதவியில் இருந்த போது புரிந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன்" என்று பேசினார்.

இதையும் படிங்க..மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios