MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தவெக எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கடி? ஆட்சியர் புகார்.. சட்ட நடவடிக்கை கோரும் மாணிக்கம் தாகூர்!

தவெக எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கடி? ஆட்சியர் புகார்.. சட்ட நடவடிக்கை கோரும் மாணிக்கம் தாகூர்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

3 Min read
Author : Velmurugan s
Published : Nov 24 2026, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக எம்.எல்.ஏ மீது வழக்கு
Image Credit : Asianet News

தவெக எம்.எல்.ஏ மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியர் அளித்த புகாரால் புதிய திருப்பம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் ஜெ.இ. பத்மஜாவுக்கு, அந்தத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் வாயிலாகத் தகாத மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்தச் சூழலில், நவம்பர் 23-ம் தேதி பிற்பகல் மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னைத் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவா?
Image Credit : Asianet News

எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவா?

ஆட்சியரின் புகாரைத் தொடர்ந்து, அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், வழக்குப்பதிவு தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. எனவே, வழக்கின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்து முறையான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

இந்த மனு நவம்பர் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கோ, தலைமைச் செயலாளருக்கோ புகார் வரவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடமும் தலைமைச் செயலாளரிடமும் நேரடியாக விவரங்களைக் கேட்டறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், நீதிமன்ற விசாரணை நடைபெற்ற அதே நாளில் பிற்பகலில் ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்ததாக வெளியான தகவல் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

34
மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியது என்ன?
Image Credit : Asianet News

மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, எந்தவித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#KallakurichiMLA

— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 24, 2026

மேலும், அரசுப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை என்றும், அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது.

44
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
Image Credit : x.com/CMOTamilnadu

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஒருபுறம் மாவட்ட ஆட்சியரின் புகார் தொடர்பான காவல்துறை நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை கோரியுள்ளது.

இதனால், தற்போது இந்தப் பிரச்சினை ஒரு மாவட்ட அளவிலான அரசியல் சர்ச்சையைத் தாண்டி, பெண் அரசு அதிகாரியின் பாதுகாப்பு, புகார் மீதான விசாரணை மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான சட்டப் பொறுப்பு ஆகிய முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விசாரணையின் முடிவு மற்றும் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்படும் விவரங்கள் இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Madurai 144 Order : திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை.. மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு
Recommended image2
Tamilnadu Weather : கார்த்திகை தீபத்தன்று தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! 9 மாவட்டங்களுக்கு அலர்ட்... லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?
Recommended image3
Now Playing
திருவண்ணாமலையில் பலத்த மழை : குளிர்ந்த வானிலையால் மக்கள் மகிழ்ச்சி !
Related Stories
Recommended image1
Tiruvannamalai Bharani Deepam : திருவண்ணாமலையில் அழகாக ஒளிர்ந்த பரணி தீபம்..விண்ணை முட்டிய அரோகரா முழக்கம்!
Recommended image2
Madurai 144 Order : திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை.. மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved